கிரெடிட் கார்டு மூலம் மோசடி: இளைஞர் கைது, ஒருவர் தப்பியோட்டம்

கிரெடிட் கார்டு மூலம் மோசடி: இளைஞர் கைது, ஒருவர் தப்பியோட்டம்
Updated on
1 min read

கோவை ராம்நகர் பகுதியில் சிலர் முறையான முகவரி கொடுக்காமல் ஆன்லைனில் அதிக அளவில் பொருட்களை வாங்குவதாக வந்த புகாரின்பேரில், ஆன்லைனில் ஆர்டர் செய்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கிய ஒருவரை சைபர் கிரைம் போலீஸார் விசாரித் தனர். அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பியோடிவிட்டார்.

விசாரணையில், பிடிபட்ட நபரின் பெயர் முகமது ஆசிக் எனவும், தப்பி ஓடியவர் பெயர் ரியாசுதீன் எனவும் தெரியவந்தது.

பல்வேறு நபர்களின் கிரெடிட் கார்டு தகவல்களைப் பயன்படுத்தி இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, முகமது ஆசிக்கை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர். 3 எல்இடி டிவிக்கள், 2 செல்போன்கள் மற் றும் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்த னர்.

இதுகுறித்து சைபர் கிரைம் ஆய் வாளர் பி.என்.ராஜன் கூறும்போது, ‘‘முகமது ஆசிக், ரியாசுதீன் இரு வரும் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளர்களாக ஆரம்பித்து, பின்னர் அந்த நிறு வனத்தில் இருந்தே வாடிக்கை யாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடியுள்ளனர்.

மேலும் ஆன்லைனில் பொருட் கள் வாங்குவதற்கு ஏதுவாக, கிரெடிட் கார்டுதாரர்களின் தொலை பேசி எண்களை நீக்கிவிட்டு, அங்கு தங்களது எண்களை பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் பணப் பரிவர்த்தனைக்கான ‘ஒருமுறை கடவுச்சொற்களை’ (ஒடிபி) தங்கள் எண்ணுக்கு வருமாறு செய்துள் ளனர். உண்மையான கிரெடிட் கார்டுதாரர்களைப் போலவே பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.

கடந்த 4 மாதத்தில் மட்டும் கோவை, சென்னையைச் சேர்ந்த பலரிடம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in