மாநகர பேருந்து மோதி பிளஸ் 2 மாணவி உயிரிழந்த நிலையில் குரோம்பேட்டையில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குரோம்பேட்டை ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று அதிகாரிகள் அகற்றினர். | படம்: எம்.முத்துகணேஷ் |
குரோம்பேட்டை ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று அதிகாரிகள் அகற்றினர். | படம்: எம்.முத்துகணேஷ் |
Updated on
1 min read

குரோம்பேட்டை: குரோம்பேட்டையில் மாநகரப் பேருந்து மோதி 3 தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார். இதற்கு சாலை அக்கிரமிப்பே காரணம் என புகார் எழுந்தது.

இதையடுத்து சம்பவம் நடந்த குரோம்பேட்டை ராஜேந்திர பிரசாத் சாலை ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியைச் சேர்ந்த பிரேம் குமாரின் மகள் லஷ்மி ஸ்ரீ (17). அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

சுதந்திர தினத்தன்று, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அங்குள்ள ராஜேந்திர பிரசாத் சாலை வழியாக சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மாநகரப் பேருந்து மோதியதில் லஷ்மி  அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து நடந்த ராஜேந்திர பிரசாத் சாலை, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 30 அடி அகலம் கொண்ட சாலையின் இருபுறத்திலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தால் சாலை குறுகிவிட்டது.

கடைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள், வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலும் விபத்தும் ஏற்படுகிறது. மாணவியின் மரணத்துக்கு இந்த ஆக்கிரமிப்புகளே காரணம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதன்தொடர்ச்சியாக சாலையின் இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

நெடுஞ்சாலைத் துறை தாம்பரம் கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர்.

காவல் துறை ஒத்துழைப்புடன் இச்சாலையில் வாகனங்களை நிறுத்தி வைப்பதையும் தடுக்க வேண்டும் என மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சுமார் 1.5 கி.மீ. தூரம் கொண்ட ராஜேந்திர பிரசாந்த் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

சாலையை அகலப்படுத்தி பிளவர் பிளாக் கற்களை பதிக்க திட்டமிட்டுள்ளோம் என நெடுஞ்சாலைத் துறை என தெரிவித்தனர்.குரோம்பேட்டை ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று அதிகாரிகள் அகற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in