

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று 2075 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சிகளில் மனு தாக்கல் முடிந்தது. அரசியல் கட்சி, சுயேச்சைகள் ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. வரும் 6-ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது .
செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 149 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். செம்பாக்கம் நகராட்சியில் உள்ள 15 வார்டுக ளுக்கு 120 பேரும் அனகாபுத்தூரில் 18 வார்டுகளுக்கு 77 பேரும் பம்மலில் உள்ள 21 வார்டுகளுக்கு 111 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், பல்லாவரம் நகராட்சியில் உள்ள 42 வார்டு களுக்கு 325 மனுக்களும் தாம்பரத்தில் உள்ள 39 வார்டுக ளுக்கு 271 மனுக்களும் மறைமலை நகரில் 21 வார்டுகளுக்கு 126 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குன்றத்தூர் பேரூராட்சில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 118 பேர் மனு தாக்கள் செய்துள்ளனர். சிட்லபாக்கம் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 72 பேரும் நந்திவரம் கூடுவாஞ்சேரியில் 18 வார்டுகளுக்கு 96 பேரும் பீர்க்கன்காரணையில் 15 வார்டுகளக்கு 108 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல், திருநீர்மலையில் உள்ள 18 வார்டுகளுக்கு 108 மனுக்களும் மாங்காட்டில் 18 வார்டுகளுக்கு 122 மனுக்களும் பெரும்புத் தூரில் 15 வார்டுகளுக்கு 83 மனுக்களும் மாடம்பாக்கத்தில் உள்ள 15 வார்டுகளுக்கு 89 பேரும் பெருங்களத்தூரில் 15 வார்டுகளுக்கு 100 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.