Published : 17 Aug 2022 07:43 AM
Last Updated : 17 Aug 2022 07:43 AM
சென்னை: தலைமைச் செயலர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் தமிழக அரசின் அகவிலைப்படியானது ஜூலை 1-ம்தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.
சுதந்திர தின உரையில், 3 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதிமுதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அதை மத்திய அரசு உயர்த்திய தேதியில் இருந்து வழங்க வேண்டும் என்று பல்வேறு சங்கங்கள்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நிதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் 75-வது சுதந்திரதின உரையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஜூலை1-ம் தேதி முதல் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித் திருந்தார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT