

மதுரையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீடு மீது மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி 30-வது வார்டு அதிமுக முன்னாள் கவுன் சிலர் அ. ஜெயக்குமார். இவரது வீடு தாசில்தார் நகரில் உள்ள மருது பாண்டியர் தெருவில் உள்ளது. இவரது தம்பி ஜெயசேகர் கீழ் வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். ஜெயக்குமார், இவரது மற்றொரு சகோதரர் ஜெயச்சந்திரன் ஆகி யோர் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக மாடி வீட்டில் வசிக் கின்றனர்.
பயங்கர சத்தம்
இவரது வீட்டு வாசலில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பயங் கர சத்தம் கேட்டது. தூக்கத்தில் இருந்து விழித்த ஜெயக்குமார் வெளியே வந்தபோது புகை வந்துள்ளது. வாசலில் கண்ணாடி பாட்டில் துகள்கள் சிதறிக் கிடந் ததுள்ளன.
மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளது தெரிய வந்தது. 2 இடங்களில் தீப்பிடித்து எரிந்ததை உடனடியாக அணைத் துள்ளனர்.
தடயங்கள் சேகரிப்பு
இதுகுறித்து அண்ணா நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீ ஸார் கூறும்போது, “ஜெயக்குமார் வீட்டின் முன்பு சிதறிக் கிடந்த பாட்டில் துண்டுகளை சேகரித்துள் ளோம். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர். கவுன்சிலராக இருந்தபோது, அவ ருக்கு எதிராக செயல்பட்டவர்கள் குறித்தும், மேலமடை ஊராட்சி தேர்தலின்போது இவருக்கும், சிலருக்கும் இடையே ஏற்கெனவே நிலவிய பிரச்சினை குறித்தும் விசாரிக்கிறோம்” என்றனர்.