

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கோவையில் மேலும் 2 இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2-ம் தேதி ஐ.எஸ். பயங் கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் கள் என்று கூறி, கேரள மாநிலத் தைச் சேர்ந்த 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் ஒருவர், கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபு பஷீர் (எ) ரஷீத்(26). இவரிடம் விசாரணை நடத்தியதில், மேலும் சிலருக்கு ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்பு இருக்கலாம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோவையைச் சேர்ந்த 14 பேரைப் பிடித்து, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடை யில், நேற்று மேலும் 2 பேரைப் பிடித்து, என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதை யடுத்து, விசாரணைக்கு உட்படுத் தப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரி கள் தரப்பில் கூறும்போது, “ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இதுவரை 16 பேரைப் பிடித்துள்ளோம். சிலர் மீதான சந்தேகம் அதிகரித் துள்ளது. விசாரணையின் முடிவுக் குப் பின்னரே, மேல் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்றனர்.