

தெற்கு ரயில்வே சார்பில் இன்றுமுதல் ஒருவார காலத்துக்கு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மத்திய ஊழல்தடுப்பு ஆணை யம் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழலை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் நவம்பர் முதல் வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, தெற்கு ரயில்வே சார்பில் இன்று (31-ம் தேதி) முதல் நவம்பர் 5-ம் தேதி வரை ஒருவார காலத்துக்கு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ‘பொது மக்களின் பங்களிப்புடன் ஊழலை ஒழித்தல்’ என்ற வாசகத்தை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு இந்த விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பாரத் பெட்ரோலியம்
சென்னை அண்ணா நகரில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவ னத்தின் வட்டார அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று (அக்.31) முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தொடங்கிவைக்கிறார். இந் நிகழ்ச்சியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சென்னை வட்டார அலுவலக உயர் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
‘பொது மக்களின் பங்களிப்புடன் ஊழலை ஒழித்தல்’ வாசகத்தை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு இந்த விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.