மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்து: கார்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி- மற்றொரு விபத்தில் இருவர் மரணம்

மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்து: கார்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி- மற்றொரு விபத்தில் இருவர் மரணம்
Updated on
1 min read

மாமல்லபுரம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். மேலும் இருவேறு விபத்துகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சைசர் டி.ஜோகர்(52) மற்றும் ஆர்டிம் ஜோகர் (26). இருவரும் உறவினர்கள். சென்னை மணலியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.

வியாபார விஷயமாக காரில் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்குச் சென்றனர். மாமல்ல புரம் புறவழிச் சாலையில் செல்லும்போது எதிரே சென்னை நோக்கி வந்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் சைசர் டி.ஜோகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஆர்டிம் ஜோகர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் இறந்தார்.

இவர்களுடன் காரில் வந்த மேலும் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை.

இந்த விபத்து காரணமாக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் மாமல்லபுரம் நகரப் பகுதி வழியாக சென்னை, புதுச்சேரிக்குத் திருப்பி விட்டனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மீனவர் பலி

ஆலமரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா (எ) நித்யானந்தம்(39). இவர் மீன்பிடிப்பதற்காக கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள குளத்துக்குச் சென்றார். அப்போது குளத்தில் தவறி விழுந்து இறந்தார். சூனாம்பேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் ஆரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் (57). கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் கொட்டகையில் இருந்த மின்கம்பியை தவறுதலாக தொட் டுள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்தி லேயே இறந்தார். சதுரங்கப் பட்டிணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in