

பெருங்களத்தூரில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடையதாக 2 பேரை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஆர்.எம்.கே.நகர், பாண்டியன் தெருவில் கே.டி.032 ரேஷன் கடை உள்ளது. இக்கடையில் உதவியா ளராக இருந்த சவுந்தர் என்பவர் 50 கிலோ கொண்ட 2 மூட்டை ரேஷன் அரிசியை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் மடக்கி பிடித்து தாம்பரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையர் சவுந்தர் ராணியிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அரிசி கடத்தலுக்கு ரேஷன் கடையில் பணியாற்றும் தமிழ் அரசு, அமுதா ஆகியோர் உதவியது தெரியவந்தது. தாம்பரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பதுகாப்புத் துறை உதவி ஆணையர் சவுந்தர் ராணியின் அறிக்கையை ஏற்று, காஞ்சி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை மேலாண்மை இயக்குநரும் இணைப் பதிவாளருமான பாபு, சம்பந்தப்பட்ட இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.