Published : 18 Oct 2016 09:23 AM
Last Updated : 18 Oct 2016 09:23 AM

ரயில் மறியல் போராட்டம் எதிரொலி: டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் திடீர் ரத்து

டெல்டா மாவட்டங்களில் நடந்த ரயில் மறியல் போராட்டங்களால் டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய விரைவு ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னை எழும்பூர் மன்னார் குடி, காரைக்கால், வேளாங்கண்ணி, தஞ்சாவூர் உழவன், எர்ணாகுளம் காரைக்கால், மன்னார்குடி கோயம் புத்தூர் செம்மொழி, மன்னார்குடி - சென்னை எழும்பூர் மன்னை, காரைக்கால் லோக்மான்ய திலக், காரைக்கால் - ஏர்ணாகுளம் உட்பட மொத்தம் 13 விரைவு ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

சென்னை எழும்பூர் மங்க ளூர் விரைவு ரயில் (16859) திருச்சிராப்பள்ளி வரையிலும், கேஎஸ்ஆர் பெங்களூர் காரைக் கால் பயணிகள் ரயில் சேவை (56514) காரைக்கால் சிதம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டது.

இன்று ரத்தாகும் ரயில்கள்

கோயம்புத்தூர் மன்னார்க்குடி செம்மொழி (16616), சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி (16853), திருச்சிராப்பள்ளி சென்னை எழும்பூர் (16854) ஆகிய விரைவு ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.

ஒரு பகுதி ரத்து

காரைக்கால் கேஎஸ்ஆர் பெங்களூர் (56513) பயணிகள் ரயில் சேவை (56513) காரைக்கால் சிதம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மாற்றுப் பாதையில்..

சென்னை எழும்பூர் திருச் செந்தூர் (16105), திருச்செந்தூர் சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16106), ராமேசுவரம் திருப்பதி (16780), சென்னை எழும்பூர் ராமேசுவரம் (16101), ராமேசுவரம் சென்னை எழும்பூர் (16102) ஆகிய விரைவு ரயில்கள் மாற்றுவழியாக (விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி) இயக்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

ரயில்கள் புறப்படும் நேரத்தில் திடீரென விரைவு ரயில்கள் ரத்து என அறிவிக்கப்பட்டதால், ரயில் நிலையங்களில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x