காவிரி பிரச்சினைக்கு அனைத்துக் கட்சி கூட்டம்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

காவிரி பிரச்சினைக்கு அனைத்துக் கட்சி கூட்டம்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
Updated on
1 min read

காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்புக்கான போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, மு.க.ஸ்டாலின் சந்தித்து அக்கூட்டத்தின் தீர்மானங்களைக் கொடுத்து, லியுறுத்தியிருப்பதை வரவேற்கிறோம்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தங்களின் பொறுப்புணர்வை உணர்ந்து திமுக, அதிமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் இணைந்து செயல்படுவது குறித்து தவறான கருத்தை வெளிப்படுத்துவதால் கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்துவிடுமே தவிர, அது தமிழகத்துக்கு எந்த பலனையும் அளிக்காது.

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான அவசரகால நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in