

சென்னை மாநகராட்சி 48-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரான சட்டக் கல்லூரி மாணவி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சென்னை மாநகராட்சிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுக்கள் சென்னையில் உள்ள 15 மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் 36 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெறப்பட்டது. கடைசி நாளான நேற்று திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர் களும் சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். அதனால், மண்டல அலுவலகங் களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ராயபுரம் பகுதியில் உள்ள 48-வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவி அபிராமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எனது அப்பா டபிள்யூ.எஸ்.ரவிச்சந்திரன், திமுக வின் நீண்டகால உறுப்பினர். இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். அப்பாவுடன் அரசியல் கூட்டங்களுக்கு சென்றிருக் கிறேன். அதனால், அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது.
இளம் வயதில் எனக்கு வாய்ப் பளித்த திமுகவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் பகுதியில் குப்பை அகற்றப் படாதது, கழிவுநீர் கலந்த குடிநீர் ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றைத் தீர்க்க பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து, வார்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.