லஞ்சத்தை ஒழிக்கவும், குடும்ப அரசியலை அப்புறப்படுத்தவும் பாஜக கடுமையாக உழைக்கும்: அண்ணாமலை

லஞ்சத்தை ஒழிக்கவும், குடும்ப அரசியலை அப்புறப்படுத்தவும் பாஜக கடுமையாக உழைக்கும்: அண்ணாமலை
Updated on
1 min read

சென்னை: “லஞ்சத்தை ஒழித்து, குடும்ப அரசியலை அப்புறப்படுத்தி, உண்மையான ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு பாஜக நிச்சயமாக கடுமையாக உழைக்கும்” என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், "தமிழ்நாட்டிலே மிக முக்கியமாக இரண்டு விஷயங்கள் தலைவிரித்தாடுகிறது. ஒன்று லஞ்ச லாவண்யம், இரண்டாவது குடும்ப அரசியல். பாரத பிரதமர் தனது சுதந்திர தின உரையில் இந்த இரண்டையும் இந்தியாவிற்கு பொதுவாக மேற்கோள் காட்டியிருக்கிறார்.

இவற்றை ஒழிப்பதற்கு பாஜக பாடுபாடும். லஞ்சத்தை ஒழிப்பதற்கு, குடும்ப அரசியலை அப்புறப்படுத்தி, உண்மையான ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு பாஜக நிச்சயமாக கடுமையாக உழைக்கும் என்று கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் சார்பாக தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in