நீட் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? - என்டிஏ அதிகாரிகள் தகவல்

நீட் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? - என்டிஏ அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

சென்னை: இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 17.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியிடுவதற்கு என்டிஏ திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப விடைக்குறிப்பு விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இதன் விவரங்களை மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in