Published : 15 Aug 2022 07:41 AM
Last Updated : 15 Aug 2022 07:41 AM
சென்னை: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 2022-23-ம்ஆண்டுக்கான பொறியியல் மாணவர்சேர்க்கை இணையவழியில் நேற்று (ஆக.14) தொடங்கியது.
முன்னதாக, இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13-ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் இருந்து 30,000 விண்ணப்பங்கள் வந்தன. தரவரிசை பட்டியல் இரவு 7 மணி அளவில் வெளியிடப்பட்டது.
இதில், JEE (Main) மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 70% இடங்களுக்கான முதல் பிரிவில், சென்னை அண்ணா நகர் எஸ்பிஓஏ பள்ளி மாணவர் அக்சய் கோவிந்த் தேசிய அளவில் 99.4263% பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் பிளஸ் 2-வில் 495 மதிப்பெண், JEE (Main) தேர்வில் 99.8526% பெற்றுள்ளார்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 30% இடங்களுக்கான 2-ம் பிரிவில், மங்களுரூ எக்ஸ்பர்ட் பியூ கல்லூரியின் போட்டுக் ஸ்ரேய்யா பிளஸ் 2-வில் 100% பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
விரிவான தரவரிசை பட்டியல் www.sastra.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. எந்த நுழைவு தேர்வும் நடத்தாமல், JEE Main மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் ஒரே நிகர்நிலை பல்கலைக்கழகம் சாஸ்த்ரா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியலில் முதல் 75 மாணவர்களுக்கு 100% கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது. ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிகோபார், வடகிழக்கு மாநில மாணவர்களுக்கு சேர்க்கையில் தனி சலுகை வழங்கப்படும்.
தஞ்சாவூர், திருச்சி மாவட்ட மாணவர்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும். அறிவிக்கப்பட்டபடி, தகுதி அடிப்படையிலான வெளிப்படையான மாணவர் சேர்க்கை இணையவழியில் நேற்று (ஆக.14) தொடங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT