ஆளுநர் - ரஜினி சந்திப்பு அடுத்த படத்திற்கான விளம்பரம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஆளுநர் - ரஜினி சந்திப்பு அடுத்த படத்திற்கான விளம்பரம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
Updated on
1 min read

ஈரோடு: "தமிழக ஆளுநர் உடனான நடிகர் ரஜினிகாந்தின் சந்திப்பு அவரது அடுத்தப் படத்திற்கான விளம்பரம். ரஜினிகாந்த் கடந்த 20, 30 வருடங்களாக ஒவ்வொரு படம் ரிலீஸாவதற்கு முன்பும் தான் அரசியலுக்கு வரப்போவதாக கூறுவார். பின்னர், ஜகா வாங்கிவிடுவவார்" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கவோன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், " நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரைச் சந்தித்திருக்கின்றார். அரசியல் பேசயிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்து தெரியும் அவர் தனது படத்திற்கான விளம்பரத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் பாஜக ரஜினியை முன்னிலைப்படுத்துவதாக தகவல்கள் வந்திருக்கின்றன. அவர் அரசியலுக்கு வந்தால்தானே அவரை நீங்கள் முன்னிலைப்படுத்த முடியும்.

எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட 20, 30 வருடங்களாக ஒவ்வொரு படம் ரிலீசாவதற்கு முன்பு, நான் அரசியலுக்கு வரப்போகிறேன், எம்ஜிஆர் ஆட்சியை தரப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, ஜகா வாங்குவதுதான் அவருடைய வேலை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in