3 தொகுதி தேர்தலில் முதல்முறையாக அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் நுண் பார்வையாளர், வெப் கேமரா: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

3 தொகுதி தேர்தலில் முதல்முறையாக அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் நுண் பார்வையாளர், வெப் கேமரா: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
Updated on
2 min read

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங் குன்றம் தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நுண் பார்வையாளர் நியமிக்கப்படு வதுடன், வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு முழுவதும் பதிவு செய்யப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித் துள்ளார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (26-ம் தேதி) தொடங்குகிறது.

இந்நிலையில், டெல்லியில் கடந்த வாரம் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி மற்றும் ஆணையர்களை தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சந்தித்து தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோ சனை நடத்தினார். இதுதொடர்பாக, சென்னையில் நிருபர்களிடம் ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது:

அரவக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 307, தஞ்சாவூரில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 33, திருப்பரங்குன்றத்தில் 2 லட்சத்து 80 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் மூன்றாம் பாலினத்தவர் இல்லை. அரவக்குறிச்சியில் 157 இடங் களில் 245 வாக்குச்சாவடிகளும், தஞ்சையில் 88 இடங்களில் 276 வாக்குச்சாவடிகளும், திருப் பரங்குன்றத்தில் 97 இடங்களில் 291 வாக்குச்சாவடிகளும் அமைக் கப்பட்டுள்ளன. அரவக்குறிச்சியில் 1,176, தஞ்சையில் 1,325, திருப்பரங் குன்றத்தில் 1,397 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர்.

இத்தேர்தலுக்காக 812 கட்டுப் பாட்டு இயந்திரங்கள், 3,248 மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. தற்போது 1,061 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 7,219 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக வைக் கப்பட்டுள்ளன.

கடந்த சட்டப்பேரவை தேர்த லைப் போன்றே இந்த 3 தொகுதி தேர்தலுக்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. பணப்புழக்கம், பணப் பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறையினர் குழுக் கள் அமைத்து, பணிகளை தொடங்கி விட்டனர். தேர்தல் செலவின பார்வையாளர்கள் வந்துவிட்டனர்.

ஏற்கெனவே பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் தொடங்கியதும் குழுக் களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படும். அதன்பிறகு தேர்தல் நெருங் கியதும் பறக்கும் படைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

புகார் தெரிவிக்க..

தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணிலோ, 9444123456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியோ தெரிவிக்கலாம். தலைமைத் தேர்தல் அதிகாரி யின் இணையதளத்திலும் தெரிவிக் கலாம். புகார்கள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அவற் றில் மட்டும் மத்திய அரசு ஊழியர்கள் நுண்பார்வையாளர்களாக நிய மிக்கப்பட்டனர். அதேபோல, பதற்ற மான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவு முழுவதையும் கண்காணிக்க வசதி செய்யப்பட்டிருந்தது.

தற்போது 3 தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி களிலும் நுண் பார்வையாளர்களை நியமிக்கவும், வெப்கேமரா பொருத் தவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

அமெரிக்கா பாராட்டு

கடந்த வாரம் டெல்லியில் நடந்த சர்வதேச தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் ராஜேஷ் லக்கானி பங்கேற்று, ஓட்டளிப்பது மற்றும் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக பேசினார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘அமெரிக்க தேர்தல் அதிகாரிகள் இந்தியாவில் தேர்தல் முன்னேற்பாடுகளை பாராட்டினர். அங்கு வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் புகைப்படம் இடம் பெறுவதில்லை. அவர்கள் நம் பிக்கை அடிப்படையில் வாக்கா ளரை அணுகுவதாக தெரிவிக் கின்றனர். ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பேக்ஸ் மற்றும் இ-மெயில் மூலம் வாக்களிக்கும் வசதிகளும் உள்ளன’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in