

தீபாவளி பண்டிகையொட்டி அறிவிக்கப்பட்ட சுவிதா, சிறப்பு கட்டண 8 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கிய ஒரு நேரத்தில் முடிந்தது.
தீபாவளி பண்டிகையை யொட்டி திருநெல்வேலி, எர்ணாகுளம், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் சுவிதா, சிறப்பு கட்டண சிறப்பு ரயில் என மொத்தம் 8 சிறப்பு ரயில் களை கடந்த 28-ம் தேதி அறிவித்தது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கும் என அறிவித்திருந்தது.
இதற்கிடையே, காலை 8 மணிக்கு தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. சுவிதா ரயிலில் முதலில் முன்பதிவு செய்யும் பயணிகளில் 20 சதவீதம் பேருக்கு மட்டும் கட்டணம் ரூ.355-ம், அடுத்து வரும் பயணிகளுக்கான கட்டணம் சுமார் 2 அல்லது 3 மடங்கு அதிகரித்து கொண்டே போகும். எனவே, வழக்கமாக இயக் கப்படும் ரயில்களை விட, சுவிதா சிறப்பு ரயில்களில் கட் டணம் அதிகம் என்பதால், சிலர் கட்டண விபரத்தை மட்டும் கேட்டறிந்து திரும்பி சென்றனர்.