

சென்னை புறநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி பருப்பு வகைகள், பாமாயில் போன்றவை விநியோகிக்கப்படாதது குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தீபாவளி பண்டிகைக்கு முன்பு ரேஷனில் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் விநியோ கிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இதனை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். புகார் செய்ய தொலைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து ரேஷன் பொருட்களை பெற்று செல்கின்றனர்.
இது குறித்து ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செய்தி வெளியானதால் 50 சதவீத பொருட்கள் உடனடியாக சப்ளை செய்யப்பட்டது. கால தாமதம் ஆகும்போது மக்களுக்கும் எங்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இனிவரும் காலங்க ளில் முன்கூட்டியே சப்ளை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.