

கோவளம்: நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கோவளம் கடற்கரையில் நேற்று காலை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிஜேந்திர சிங் தலைமையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, சுத்தமான கடல் பாதுகாப்பான கடல் - என்ற பிரச்சாரத்தின் வாயிலாக கோவளம் கடற்கரையில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து மீனவ மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கோவளம் கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கப்பட்டது என்றார்.
இந்த நிகழ்வில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் எம்.ரவிச்சந்திரன், தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.