

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையை அடுத்து கோவையில் நடைபெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய் யப்பட்டதையடுத்து நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக, உண்மை அறியும் குழு விசாரணை நடத்தியது. மக்கள் சிவில் உரிமைக் கழக (பியுசிஎல்) சார்பில் அமைக்கப்பட்ட இக்குழுவில், அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் கண.குறிஞ்சி, செயலாளர் முரளி, காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மார்கண்டன், தமிழ் தேசிய விடுதலை இயக்க நிர்வாகி தியாகு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் சாமுவேல் ராஜ் மற்றும் கர்நாடகா, கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த 2 நாட்களாக கோவையின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட குழுவினர், கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இந்து முன்னணி பிரமுகர் சசி குமார் உடலை அரசு மருத்துவ மனையில் இருந்து 18 கிமீ தூரம் ஊர்வலமாகக் கொண்டுசென்று, துடியலூர் மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். ஊர்வலம் நடைபெற்ற வழியெங்கும் உள்ள முஸ்லிம்களின் கடைகள், வணிக மையங்கள், மசூதிகளைத் தாக்கியுள்ளனர். ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் தாக்கப் பட்டுள்ளன. திட்டமிட்டு இத்தாக்கு தலை நிகழ்த்தியுள்ளனர். செல் போன் கடையை உடைத்து, உள் ளிருந்த பொருட்களைக் கொள்ளை யடித்துள்ளனர். வன்முறையாளர் களைத் தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. இந்த வன்முறையால் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சசிகுமாரின் கொலைக்கான காரணத்தையும், உண்மையான குற்றவாளிகளையும் இன்னும் கண்டறியவில்லை. இந்த விவகாரத்தை அடுத்து, முஸ்லிம் களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு, ஜனநாயகத்துக்கு ஆபத் தானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் பெரும்பாலான அரசியல் கட்சியினர் முன்வர வில்லை என்பது வேதனைக் குரியது.
வன்முறையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கலவரத்தில் ஈடுபட்டவர்கள், தூண்டியவர்கள், உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மதவாத சக்திகளைக் கண்காணித்து, சட்டரீதியான நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்களது ஆய்வறிக்கையை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க உள்ளோம் என்றனர்.