அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி முன் பணம் வழங்கிடுக: மதிமுக

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி முன் பணம் வழங்கிடுக: மதிமுக
Updated on
1 min read

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி வழக்கமாக வழங்கப்படும் முன் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று மதிமுகவின் மறுமலர்ச்சி தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மறுமலர்ச்சி தொழிற்சங்கத்தின் தலைவர் ஆவடி அந்திரிதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது அரசு ஊழியர்களுக்கு முன் பணம் வழங்கப்படுவது வழக்கம். எப்போதும், ஒரு மாத காலத்துக்கு முன்பே வழங்கப்படும் இந்த முன் பணைத்தை தமிழக அரசு, இந்தாண்டு தீபாவளிக்கு முதல் நாள் வரை வழங்காகமல் உள்ளது.

போனஸ் தொகை அதிகமாக வழங்கிவட்டதாக கருதி, முன் பணத்தை தமிழக அரசு வழங்காமல் உள்ளது. தற்போதைய விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றோடு ஒப்பிடும் போது போனஸ் தொகை குறைவே. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் அவர்களின் சம்பளத்திலிருந்து தான் பிடித்தம் செய்யப்படும். எனவே, தீபாவளியையொட்டி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக முன் பணம் வழங்க வேண்டும்'' என்று ஆந்திரிதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in