ராமேசுவரம் மீனவர் விசைப்படகு மூழ்கடிப்பு: இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம் மீனவர் விசைப்படகு மூழ்கடிப்பு: இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

மீன் பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கடலில் மூழ்கடித்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து நேற்று முன் தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக் கச் சென்றனர். நேற்று அதிகாலை மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிக்கக் கூடாது என எச்சரித்தவாறு தங்கள் சிறிய ரக ரோந்து கப்பல் மூலம் மீனவர்களை விரட்டியுள்ள னர்.

இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய குரூஸ் என்பவரின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியுள்ளது. இதனால், விசைப் படகு சேதமடைந்து கடல் நீர் புகுந்து மூழ்கத் தொடங்கியது. உடனே படகில் இருந்த ஆண்ட் ரூஸ், உமேஸ், ஜெகன், நாகராஜ், ரபோ ஆகிய 5 மீனவர்கள் கடலில் குதித்து நீந்தத் தொடங்கினர். பின்னர் 5 மீனவர்களையும் சக மீனவர்கள் காப்பாற்றி ராமேசு வரத்துக்கு அழைத்து வந்தனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத் தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மீனவப் பிரதிநிதிகள் போஸ், தேவதாஸ், சேசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

வேலைநிறுத்தம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மீனவப் பிரதிநிதி போஸ் கூறிய தாவது:

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு வந்தி ருக்கும் தருணத்தில் புதுக் கோட்டை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ராமேசு வரம் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் மோதி மூழ்கடித் துள்ளனர். மூழ்கடிக்கப்பட்ட பட குக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.

கடந்த ஒன்றே முக்கால் ஆண்டு களில் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 114 விசைப் படகுகள் மற்றும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை விடு தலை செய்ய வலியுறுத்தி வியாழக் கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத் தையும் தொடங்கியுள்ளோம் என்றார்.

ராமேசுவரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in