Published : 31 Oct 2016 08:47 AM
Last Updated : 31 Oct 2016 08:47 AM

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு இன்று அதி காலை 1 மணிக்கு நடைதிறக்கப் படுகிறது. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மாலை 4 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாத ருக்கு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது, தங்க ரதத்தில் கிரி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்தல் நடைபெறும்.

2-ம் நாள் திருவிழா வான நாளை முதல் 5-ம் நாள் திரு விழாவான நவம்பர் 4-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

6 ம் நாள் திருவிழாவான நவ.5-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். மாலை 4.30 மணிக்குமேல் ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடை பெறும். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 6-ம் தேதி மாலை 6.30 மணியளவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும், இரவு திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x