Published : 13 Aug 2022 06:50 AM
Last Updated : 13 Aug 2022 06:50 AM
சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலமாக்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ.5.43 கோடியில் 10,583 உலமாக்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்தில் 3 உலமாக்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
மேலும், இந்த ஆண்டில் மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1,649 பயணிகளுக்கு தமிழக அரசு சார்பில் தலாரூ.27,628 வீதம், மொத்தம் ரூ.4.56 கோடி வழங்கப்படுகிறது. அதன்படி, 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஹஜ் குழு செயலர் முகமது நசிமுத்தின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT