Published : 13 Aug 2022 07:46 AM
Last Updated : 13 Aug 2022 07:46 AM
சென்னை: தொடர் விடுமுறை காரணமாக ஆம்னிபேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திர தினம் திங்கள்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, அரசுஅலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பெரும்பாலானோருக்கு இன்று (ஆக.13) முதல் மூன்று நாட்கள்விடுமுறை கிடைத்துள்ளது. இதனால்விடுமுறையை கழிக்க அவர்கள் நேற்றுமுதலே சொந்த ஊருக்கு பயணிக்கத் தொடங்கிவிட்டனர்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆம்னி பேருந்துஉரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, “இதுபோன்ற விடுமுறை நாட்களில் மட்டுமே பேருந்துகளில் சற்று அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சங்கம் சார்பில்நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால், கட்டணத் தொகையை திருப்பி அளிக்க அறிவுறுத்தியுள்ளோம்” என்றனர்.
இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம்உள்ளன. போக்குவரத்து துறைஆணையர் மூலம் ஆம்னி பேருந்துஉரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
இதை கண்காணிக்க இணை போக்குவரத்து ஆணையர், துணைபோக்குவரத்து ஆணையர், வட்டாரபோக்குவரத்து அலுவலர்களைக்கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவர்களது ஆய்வின்போது கூடுதல்கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து அரசின் கட்டணமில்லா சேவை எண்ணில் (1800 425 6151)மக்கள் புகார் கூறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT