Published : 25 Oct 2016 08:08 AM
Last Updated : 25 Oct 2016 08:08 AM

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப் பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.

தமிழகத்தில் கடந்த மே 16-ம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தது. பணப்பட்டுவாடா புகார்களால் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, அதன் பின்னர் ரத்து செய்யப்பட்டது. மற்ற 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து மே 19-ம் தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், திருப்பரங் குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சீனிவேலு, உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே அரவக் குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (26-ம் தேதி) தொடங்கி நவம்பர் 2-ம் தேதி முடிகிறது. 3-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை வாபஸ்பெற நவம்பர் 5 கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x