கட்சியைப் பற்றி எழுதினால் நம்ப வேண்டாம்: நாமக்கல்லில் தொண்டர்களிடம் விஜயகாந்த் பேச்சு

கட்சியைப் பற்றி எழுதினால் நம்ப வேண்டாம்: நாமக்கல்லில் தொண்டர்களிடம் விஜயகாந்த் பேச்சு
Updated on
1 min read

பத்திரிகைகளில் தேமுதிகவைப் பற்றி எழுதுவதை நம்ப வேண்டாம் என நாமக்கல்லில் நடைபெற்ற ‘உங்களோடு நான்’ கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசிய தாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள திருமண மண்ட பத்தில் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக நிர்வாகிகளுடன், அக் கட்சித் தலைவர் விஜயகாந்த் கருத்து கேட்கும் கூட்டம் நடை பெற்றது. அக்கூட்டத்தில், சட்ட மன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பியபோது, அத்துறைக்கு சம்பந்தப்படாத அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரி வித்ததால், அக்கட்சியினர் கூச்சல் எழுப்பினர். அதற்காக நான் நாக்கை துருத்தியதை மட்டும் பத்திரி கையில் எழுதினார்கள். மக்கள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பி யதை யாரும் எழுதவில்லை.

பத்திரிகைகளில் நம்மை பற்றி எழுதுவதை நம்ப வேண்டாம் என விஜயகாந்த் பேசியதாக அக்கட்சி யினர் தெரிவித்தனர். மண்டபத்தில் விஜயகாந்த் நுழைந்தவுடன் கதவு, ஜன்னல் என அனைத்தும் அடைக்கப்பட்டன. கட்சியினரின் மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்யும்படி விஜயகாந்த் உத்தர விட்டார். நிருபர்கள் அனுமதிக்கப் படவில்லை. சிறிது நேர பேச்சுக்கு பின், இருவர் இரு வராகச் சென்று அவருடன் புகைப் படம் எடுத்துக்கொள்ள அனுமதிக் கப்பட்டனர்.

பின்னர் மாலை 5 மணியளவில் நாமக்கல் லில் இருந்து சேலத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு விஜயகாந்த் புறப் பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in