

சென்னை: சென்னை பெரம்பூரில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நடந்துவரும் ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார்.
சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில், வந்தே பாரத் திட்டத்திற்கான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. 102 பெட்டிகளை தொழிலாளர்கள் தயாரித்து வரும் நிலையில், ரயில்வே அமைச்சர் ரயில் பெட்டிகளை பார்வையிட்டார். மணிக்கு 160 கி.மீ, வேகத்தில் செல்லும் வகையில், வந்தே பாரத் திட்டம் தயாரிக்கப்படுகின்றன.
பின்னர், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "வந்தே பாரத் ரயில்களில், அனைத்துவிதமான வசதிகளும் உள்ளன. தமிழகத்தில் உள்ள அழகிய ரயில் பெட்டி தொழிற்சாலையில் இந்த ரயில்கள் தயாரிக்கப்பட்டது பெருமையளிக்கிறது.
தமிழகத்தின் கலாசாரத்தைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். தமிழ் மொழியைப் பார்த்து பெருமைப்படுகிறேன். வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கு நன்றி" என்று அவர் கூறினார்.