மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதே திமுக அரசின் நோக்கம்: கரு.நாகராஜன்

மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதே திமுக அரசின் நோக்கம்: கரு.நாகராஜன்
Updated on
1 min read

சென்னை: பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று ரக்சா பந்தன் கொண்டாடப்பட்டது இதில்,பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, கட்சித் தொண்டர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு ராக்கிகயிறு கட்டியும், இனிப்பு வழங்கியும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், நாராயணன் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: போதைப் பொருட்களை தடுக்கதமிழக அரசு தவறிவிட்டது. இளைஞர்களின் நலனைக் காக்க, போதைப் பொருட்கள் கடத்துவோரை உடனடியாக கைது செய்யவேண்டும்.

புதிய மின்சார சட்டத் திருத்தத்தை தமிழக அரசும், சில எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன. இந்த சட்டத் திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வாய்ப்பில்லை.

விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்கினாலும், அதற்கான நிதியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்துக்குக் கொடுப்பதில்லை.

இதனால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நஷ்டத்தில் இயங்கி வருவதுடன், ரூ.1.50 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. இத்தகைய சூழல்களை சரி செய்யவே புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

தனியாரிடம் மின் விநியோகம் சென்றாலும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும். இலவச மின்சாரத் திட்டத்தை நிறுத்துமாறு மத்திய அரசு கூறவில்லை. ஊழலைத்தான் நிறுத்தச் சொல்கிறது.

பாஜக சார்பில் பல இடங்களில் தேசியக் கொடி ஏற்ற தமிழக அரசுதடை விதிக்கிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். மத்திய அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்ப்பதே தமிழக அரசின் நோக்கமாக இருக்கிறது. இவ்வாறுஅவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in