

இன்று - காந்தி கிராம பல்கலைக்கழக நிறுவனர் நாள்
சுதந்திர இந்தியாவில் அடிப்படைக்கல்வி அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்றடைய மத்திய, மாநில அரசுகள் செயல் திட்டங்களைச் செயல்படுத்தி வகுத்து வருகின்றன. ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் அந்நாட்டு மக்களின் உயர்கல்வி அறிவே பெரும்பங்கு வகிக்கிறது. கல்வி மனிதனைப் பண்படுத்துகிறது. நெறிப்படுத்துகிறது. இந்தக் கருத்தினை முன்வைத்தே தேசப் பிதாவும், ‘கிராமம் உயர நாடு உயரும்’ என்ற கொள்கையை முன் வைத்தார்.
காந்தியடிகளின் இந்த கொள் கையைத் தன் வாழ்வின் முழு மூச்சாகக் கொண்ட மதுரை டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த டாக்டர். டி. எஸ். சௌந்தரம் அம்மையார், அவரது கணவர் டாக்டர்.ஜி. இராமச்சந்திரன் ஆகியோர் தம் பெருமுயற்சியால் 1947-ஆம் ஆண்டு திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லிலிருந்து 12 கி.மீ தொலைவில் காந்திகிராமம்’ என்ற முன் மாதிரி கிராமம் உருவானது.
இந்தியாவில் மூன்று இடங்களில் (அருணாச்சலப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு) மட்டுமே காந்தியின் பெயரால் கிராமங்கள் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் முயற்சியால் தற்போதுள்ள காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகம், காந்தி கிராமத்தில் உருவானது. இன்று டாக்டர்.ஜி. இராமச்சந்திரனின் 113வது பிறந்த நாள். இந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் நிறுவனர் நாளாக கொண்டாப்படுகிறது.
இதுகுறித்து காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்துறை உதவிப் பேராசிரியர் சி.சிதம்பரம் கூறியதாவது:
காந்திகிரா மத்தில் சௌந்தரம் அம்மையாரும், அவரது கணவர் டாக்டர் ஜி.ராமச் சந்திரனும் கிராமப்புற மக்களின் மேப்பாட் டிற்காக முதலில் ஒரு ஆரம்பப் பள்ளியைத் தொடங்கினர். இந்தச் சிறு தொட க்கம், படிப்படியாக வளர்ச்சி பெற்று காந்திகிராம அறக் கட்டளையாக உருவானது. இந்த அறக்கட்டளையை நிறு வுவதற்கு இடம்கொடுத்து உதவியதில், அருகில் உள்ள சின்னாளபட்டி மக்களின் பங்கு அளப்பெரிது. பிறகு 1956-ஆம் ஆண்டு ஒரு சிறிய கிராமப்புறக் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. இந்தியாவில் 14 இடங்களில் கிராமப்புற முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட நிறுவனங்களில் இன்று காந்திகிராம நிறுவனம் மட்டுமே இன்று தழைத்து ஓங்கி நிற்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
1976-ஆம் ஆண்டு இந்திய அரசின், தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்து ள்ளது. தமிழ், இந்திய மொழிகள், கிராமியக் கலைகள், அயல்நாட்டு மொழிகள், சமூகவியல், கிராம வளர்ச்சி, கிராமப்புற தொழில் வளர்ச்சி, ஊரக சுகாதாரம் மற்றும் நலவாழ்வு, காந்திய சிந்தனை மற்றும் அமைதியியல், அரசியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகம், கூட்டுறவு, வாழ்நாள் கல்வியியல் மற்றும் விரிவாக்கக் கல்வி, வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு, உடற்கல்வியியல், கல்வியியல் போன்ற கிராமப்புற மேம்பாடு சார்ந்த துறைகளுடன் இயற்பியல், வேதியியல், கணிதவியல், கணினியியல், எதிர் காலவியல், மகளிரியல், உயிரியல், மனையியல், ஆடை வடிவமைப்பு போன்ற பல நவீனத் துறைகளையும் கொண்டு மாணவர்களுக்கு நிறைவான உயர்வான உயர்கல்வி சேவையை காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.
பட்டயச் சான்றிதழ், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், இளமுனைவர் பட்டம், முனை வர் பட்டம் ஆகியவற்றை மாணவர்களுக்காக வழங்குகிறது. மத்திய பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப்பு மாணவர்களும் மக்களும் பயனுற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக சௌந்திரம் அம்மாவும், ஜி. இராமச்சந்திரன் மாமாவும் நிறுவிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் 1976 ஆகஸ்ட் 3-ஆம் நாள் மத்திய அரசால் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக மாறினாலும் 1956-இல் கிராமப்புறக் கல்லூரியாக ஏற்படுத்தப்பட்ட பொழுதே நிறுவனர் துணைவேந்தர் ஜி. இராமச்சந்திரனின் பெயராலேயே நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிறகு 1987-ஆம் ஆண்டு தற்பொழுது உள்ள கட்டிடத்திற்கு (12,600 சதுரடி பரப்பளவில்) இடமாற்றம் செய்யப்பட்டது. இக்கட்டிடம் இரண்டு தளங் களைக் கொண்டது. இங்கு நூல்களை கையாளும் பகுதி, தொழில்நுட்பப் பிரிவு, குறிப்பு உரை புத்தகப்பிரிவு, புத்தகங்களைக் கணினி வழித்தேடும் பிரிவு, நேரடி மின் இதழ் இணைய வழி பொது வசதி, அனுமதி பட்டியல், இணைய சேவைகள், புத்தக தரவுப்பட்டியல் தேடுதல், தொடர் தரவுத்தளம் தேடுதல் பகுதி, மின் இதழ்கள் பெறும் வசதி, வாசகர்களை வழிகாட்டும் வகையில் அமைந்த நூற்பட்டியல் சேவை, வளாகக் கல்வியாளர்கள் (2002-2009) பற்றிய புதிய வெளியீ டுகள் எனப் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியதாக நூலகம் அமைந் துள்ளது, என்றார்.