

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய, மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையால் காவிரி பிரச்சினையில் தமிழகத் துக்கு தொடர்ந்து அநீதி இழைக் கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந் தாலும் புதிய அணைகளைக் கட்டி பாசனப் பகுதிகளை விரிவு படுத்தி தமிழகத்துக்கு எதிராகத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கடந்த 2013-ல் அன்றைய காங்கிரஸ் கூட்டணி அரசு மத்திய அரசிதழில் வெளி யிட்டது. இதன் மூலம் நடுவர் மன்ற தீர்ப்புக்கு சட்டப் பாதுகாப்பு கிடைத்தது.
அணைகளில் தண்ணீர் அதிக மாக இருக்கும்போது தண்ணீரை திறந்துவிடும் வடிநிலமாக தமிழகத்தை கர்நாடக அரசு கருதி வருகிறது. வறட்சியான காலங் களில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தண்ணீரை திறந்து விட கர்நாடகா மறுத்து வருகிறது. கூட்டாட்சித் தத்து வத்தை குழிதோண்டிப் புதைக் கும் இந்தச் செயல் கடும் கண்ட னத்துக்குரியது.
‘நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்ட பிறகு அது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. இதனை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்யக்கூடாது. இதற்கு அனை வரும் கட்டுப்பட வேண்டும்’ என 2002-ல் திருத்தப்பட்ட பன் மாநில நீர்த்தகராறு சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், ‘நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. நாடாளுமன்றத்துக்கு தான் அதிகாரம் உள்ளது’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான பாஜக அரசு ஆதாய நோக்கத்தோடு தமிழகத்துக்கு எதிரான முடிவை எடுத்துள்ளது. இது தமிழகத்துக்கு இழைக்கப் பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.
தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் அலுவலகம் சென்ற தமிழக எம்பிக்களை பிரதமர் மோடி சந்திக்க மறுத்துள்ளார். இதனைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வரும் 15-ம் தேதி திருச்சியில் எனது (திருநாவுக் கரசர்) தலைமையில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்க பாலு, குமரிஅனந்தன், எம்.கிருஷ் ணசாமி உள்ளிட்டோர் உண்ணா விரதப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.