Published : 11 Aug 2022 05:36 AM
Last Updated : 11 Aug 2022 05:36 AM

உலக புகைப்பட தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் புகைப்பட போட்டி

சென்னை: உலக புகைப்பட தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆக.19-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆக.15 அன்று இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டும் கொண்டாடப்பட உள்ளது. இவ்விரு சிறப்பு தினங்களையும் கொண்டாடும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் புகைப்பட போட்டியை நடத்துகிறது.

விருப்பமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்

‘75-வது இந்திய சுதந்திர தினம்’ எனும் தலைப்பில் நடைபெறும் இந்த புகைப்பட போட்டியில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். புகைப்படங்கள் ஆன்லைன் லிங்க்கின் வழியாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். புகைப்படங்கள் குறுகிய பக்கத்தில் 640 பிக்ஸல்கள் மற்றும் நீளமான பக்கத்தில் 2000 பிக்ஸல்களுக்கு மேல் இருக்கக் கூடாது. படங்கள் 6 MB-க்குள் JPEG வடிவத்தில் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக இரு படங்களை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

போட்டியில் பங்கேற்பவரின் பெயர், செல்பேசி எண்ணைக் குறிப்பிட வேண்டும். வேறு நிறுவனங்களின் பதிப்புரிமை பெற்ற படங்களைத் திருத்தம் செய்து அனுப்பக் கூடாது. இப்போட்டியில் பங்கேற்க ரூ.295/-செலுத்தி, https://www.htamil.org/00909 என்ற லிங்க்-கில் பதிவு செய்துகொள்ளலாம். படங்களை வரும் ஆகஸ்ட் 16-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ‘வெற்றிக்கொடி’ நாளிதழின் ஒரு மாத இலவச சந்தாமற்றும் இ-சான்றிதழும் வழங்கப்படும். சிறந்த புகைப்படங்களுக்கு ரொக்கப் பரிசுகள் உண்டு. கோவையின் புகழ்பெற்ற புகைப்பட நிபுணர் டி.ஏ.நடராஜன், இப்போட்டியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறந்த புகைப்படங்களைத் தேர்வு செய்யவுள்ளார். புகைப்பட போட்டி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x