முன்னணி நடிகர்களின் சினிமாக்களை 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடி-யில் வெளியிட வேண்டும்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

முன்னணி நடிகர்களின் சினிமாக்களை 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடி-யில் வெளியிட வேண்டும்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

சேலம்: தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் சுப்ரமணியம், பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

பின்னர், சங்கத் தலைவர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுக்குழு மூலம்நிறைவேற்றிய சில தீர்மானங்களை தமிழக அரசுக்கு கோரிக்கையாக முன்வைக்கிறோம்.

சினிமா ஆபரேட்டர்களாக, டிப்ளமோ படித்தவர்களை பணியில்அமர்த்த அனுமதிக்க வேண்டும்.தமிழகத்தில்தான் டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது. பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் ரூ.500 முதல்800 வரை டிக்கெட் கட்டணம் உள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் அதிகபட்ச கட்டணம் ரூ.190- ஆக இருக்கிறது.

நடிகர் கமலின் விக்ரம்-2மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த சினிமாவை ஓடிடி - தளத்தில் வெளியிட்டிருந்தால், இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்காது. அதனால் தியேட்டரில்படம் வெளியிடப்படுவதற்கும் ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கும்இடையே 8 வார இடைவெளிவேண்டும் என்று நாங்கள்கோரிக்கை விடுக்கிறோம்.

முன்னணி நடிகர் அமீர்கான், தனது சினிமாக்களை 6 மாதங்களுக்கு பின்னரே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல தமிழகத்தில் ரஜினி,கமல், விஜய், அஜித் உட்பட முன்னணி நடிகர்களும் தங்களது சினிமாக்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்து, 8 வாரங்களுக்குப் பின்னர் ஓடிடி-யில் வெளியிட வேண்டும். இதற்காக, நடிகர்கள் தங்கள் சினிமாவுக்கான ஒப்பந்தத்தில் ஈடுபடும்போது, சினிமாவை ஓடிடி தளத்தில் எப்போது வெளியிட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in