புதிய ரயில்வே அட்டவணையில் புறக்கணிப்பு: தூத்துக்குடி பயணிகள் மிகுந்த ஏமாற்றம்

புதிய ரயில்வே அட்டவணையில் புறக்கணிப்பு: தூத்துக்குடி பயணிகள் மிகுந்த ஏமாற்றம்
Updated on
2 min read

தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணையிலும் தூத்துக்குடி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

தெற்கு ரயில்வே சார்பில் புதிய ரயில் கால அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள் ளது. இதில் தூத்துக்குடி பயணி களின் கோரிக்கை புறக் கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

துறைமுக நகரமும், தொழில் நகரமுமான தூத்துக்குடியில் தினசரி இரண்டு முக்கிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி- சென்னை இடையே முத்துநகர் அதிவிரைவு ரயில் மற்றும் தூத்துக்குடி- மைசூர் இடையே மைசூர் விரைவு ரயில் ஆகிய இரு ரயில்களும் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

முத்துநகர் அதிவிரைவு ரயில் தினமும் இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடியில் புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சேர்கிறது. மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து தினமும் இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு தூத்துக்குடி வருகிறது.

அதுபோல, மைசூர் விரைவு ரயில் தினமும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு மைசூர் போகிறது. மறு மார்க்கத்தில் தினமும் மாலை 6 மணிக்கு மைசூரில் புறப்பட்டு, காலை 11.15 மணிக்கு தூத்துக்குடி வருகிறது.

புதிய கால அட்டவணை வெளியிடும் போது இந்த இரு ரயில்களின் நேரத்தையும் மாற்றி அமைக்க வேண்டும் என்பது தூத்துக்குடி பயணிகளின் நீண்ட கால கோரிக்கை.

அதாவது தூத்துக்குடி- சென்னை முத்துநகர் அதிவிரைவு ரயில் தினமும் காலை 7 மணிக்குள் சென்னை சென்று சேரும் வகையிலும், மைசூர் விரைவு ரயில் தினமும் மாலை 6 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து கிளம்பி செல்லும் வகையிலும், காலை 9 மணிக்கு முன்பாக தூத்துக்குடி வந்து சேரும் வகையிலும் பயண நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கை.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம், தொழில் வர்த்தக சங்கங்கள், வணிக சங்கங்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றவில்லை.

நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய கால அட்டவணையில் தூத்துக்குடி- சென்னை முத்துநகர் அதிவிரைவு ரயில் இரவு 8 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு காலை 7.50 மணிக்கு சென்னை சேரும் வகையில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பயண நேரம் 5 நிமிடங்கள் கூடுதலாகிறது.

அதேநேரத்தில் மறுமார்க்க த்தில் பயண நேரம் 35 நிமிடங் கள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.35 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேரும் வகையில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மைசூர் விரைவு ரயிலை பொறுத்தவரை இரு மார்க்கத்திலும் பயண நேரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப் படவில்லை. இது தூத்துக்குடி மாவட்ட பயணிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது.

மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலா ளர் எம்.பிரம்மநாயகம் கூறும்போது, ``முத்து நகர் ரயில் காலை 7 மணிக்கு சென்னைக்கு சேரும் வகையில் நேரத்தை மாற்ற வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு ரயில்வேயை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், கோரிக்கை ஏற்கப்படவில்லை. தற்போது காலை 7.50 மணிக்கு போய் சேரும் வகையில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோருக்கு வசதிதாக இருக்காது. பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

அதுபோல மைசூர் விரைவு ரயிலின் நேரமும் மாற்றப்படவில்லை. தெற்கு ரயில்வே நிர்கவாகம் சரக்கு ரயில் போக்குவரத்தில் மட்டுமே தூத்துக்குடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பயணிகள் ரயில் சேவையை பொறுத்தவரை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. துறைமுக நகரம் மற்றும் தொழில் நகரமாக இருப்பதால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். காலை 7 மணிக்குள் ரயில் சென்னை போய் சேர்ந்தால் தான் அவர்களுக்கு வசதியாக இருக்கும். எனவே, முத்துநகர் அதிவிரைவு ரயில் மற்றும் மைசூர் விரைவு ரயில் நேரத்தை மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in