ஐஎஸ் தொடர்பு குறித்து 11 பேரிடம் விசாரணை: கோவையில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரம்

ஐஎஸ் தொடர்பு குறித்து 11 பேரிடம் விசாரணை: கோவையில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரம்
Updated on
1 min read

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கோவையில் 11 இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கடந்த 2-ம் தேதி ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, 6 பேரை என்ஐஏ அதிகாரி கள் கைது செய்தனர். அவர் களில், கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபு பஷீர் (எ) ரஷீத்தும்(26) ஒருவர். இவரிடம் விசாரணை நடத்தியதில், மேலும் சிலருக்கு ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்பு இருக்கலாம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கோவையைச் சேர்ந்த 8 இளைஞர்களிடம், என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடை யில், அவர்கள் அளித்த தகவலின் பேரில், உக்கடம், குனியமுத் தூரைச் சேர்ந்த மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று பிடித்துச் சென்றனர். இதுவரை பிடிபட்டுள்ள 11 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகி றது. அவர்களது செல்போன், மடிக்கணினி மூலம் மேற்கொள் ளப்பட்ட தகவல் பரிமாற்றம் குறித் தும் ஆய்வு மேற்கொள்ளப்பட் டுள்ளது.

அதிகாரிகள் வருகை

கேரளாவில் கைது செய்யப் பட்ட அபு பஷீரின் மடிக்கணியில் பல்வேறு தகவல்கள் உள்ளன. அதை கோவைக்கு கொண்டுவந்த என்ஐஏ அதிகாரிகள், அதுகுறித்து கோவையைச் சேர்ந்த இளைஞர் களிடம் விசாரித்து வருகின்றனர். அதில் உள்ள தகவல்கள், உருது மொழியில் இருப்பதால், அவற்றை மொழிபெயர்க்க டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கோவைக்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரி கள் தரப்பில் கூறும்போது, “ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களை மூளைச் சலவை செய்து, தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்து கின்றனர். கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகத்துக்குரிய நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்குப் பின்னரே, கூடுதல் விவரங்கள் தெரியவரும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in