

விருத்தாசலத்தை அடுத்த புது கூரைப்பேட்டையைச் சேர்ந் தவர் கணேசன்(40). அதிமுக தொண்டரான இவர், தமிழக முதல்வரின் உடல் நலக்குறைவை முன்னிட்டு வருத்தத்துடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். கணேசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.