

உள்ளாட்சித் தேர்தலில் தலையிட மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன் னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மதுரையில் இருந்து நேற்று சென்னை வந்த மு.க.அழகிரி, மீனம் பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டேன். இந்தத் தேர்தலில் நான் தலையிட மாட்டேன். நல்லோர் பக்கம் நான் இருப்பேன்’’ என்றார்.
கருணாநிதியின் நெருங்கிய உறவினரான அமிர்தம் குடும்ப விழாவில் பங்கேற்பதற்காக அழகிரி சென்னை வந்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். சென்னையில் கோபாலபுரம் இல்லத்தில் அழகிரி தனது தாயார் தயாளுஅம்மாளை சந்தித்து நலம் விசாரிப்பார் எனக் கூறப்படுகிறது.