

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள மாநில அரசுக்கான 312 பிடிஎஸ் இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு சென்னையில் இன்று நடக்கிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மாநில அரசுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்காக இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.
இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவில் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான 312 பிடிஎஸ் இடங்கள் மீதமுள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடக்கிறது.