

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட தமிழகம் முழுவதும் மொத் தம் 1,31,794 பதவிகளுக்கு 4,97,840 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் இந்த முறை நேரடி யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால் அதிமுக, திமுகவில் ‘தலைவர்’ பதவிக்காக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கவுன்சிலர் தேர்லில் வேட்பாளராக களம் இறங்கினர்.
அதிமுக, திமுக வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் முதல் பிரச்சாரம், ஊர்வலம் என கடந்த ஒரு வாரமாக கட்சியினரையும், வாக்காளர்களையும் கவர பணத்தை தண்ணீராக செலவழித் தனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கிராம முக்கிய பிரப லங்கள், மாநகராட்சி வேட்பாளர் களைவிட அதிகமாக செலவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று திடீரென சென்னை உயர் நீதிமன்றம் உள் ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித் தது. உள்ளாட்சித் தேர்தல் ரத்தால், தற்போது வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக, திமுக வேட்பார்கள் மற்றும் அதிக அளவில் பணம் செலவழித்த வேட்பாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மீண்டும் வாய்ப்பு கிடைத்தா லும், கிடைக்காவிட்டாலும் இது வரை தேர்தலுக்காக பல லட்ச ரூபாய் செலவு செய்ததால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரத்தில் ‘சீட்’ கிடைக்காமல் விரக்தியில் இருந்த அதிமுக, திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் சிலர் கூறும்போது, “வேட்பாளராக அறிவித்த நாள் முதல் தற்போது வரை ஏராளமாக செலவு செய் துள்ளோம். இந்த பணத்தை இழந்த தற்காக வருத்தப்படவில்லை என்றாலும், மீண்டும் இதே வார்டு கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. வாய்ப்பு கொடுத்தாலும், தற்போது செலவு செய்ததுபோல் மீண்டும் செலவு ஏற்படும்” என்றனர்.