

மணிமங்கலம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளி அமைக்க வேண்டும் என்று வாசகர் ஒருவர் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி சேவையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதா வது: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத் தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியில் அரசினர் உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. மணிமங்கலம், புஷ்பகிரி, பாரதி நகர், இந்திராநகர், சேத்துப்பட்டு, மலைப்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 291 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 2007-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 13 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். பள்ளியில் 3 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இந்தப் பள்ளி 5 சென்ட் நிலத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதி இல்லாமல், இடிந்து விழும் நிலையில் ஆபத்தான நிலை யில் உள்ள கட்டிடத்தில் மாணவர் கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு என்று தனித்தனியே கழிப்பறை வசதி இல்லை. விளையாட்டு மைதானமும் இல்லை. இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வேறு இடத்தில் விளையாட்டு மைதானத்துடன் கூடுதல் வசதிகளு டன் பள்ளிக்கு கட்டிடம் கட்ட கிராம பஞ்சாயத்து சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிக நிலப்பரப்பில் கூடுதல் வசதிகளுடன் பள்ளி கட்டிடம் கட்ட சில தனியார் மென்பொருள் நிறுவனங்கள் முன்வந்தன. இதற்கு தேவையான நிலத்தை பல ஆண்டுகள் ஆகியும் வருவாய்த் துறையினர் வழங்கவில்லை.அந்த சிறிய இடத்திலேயே தற்போது கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அரசு இதில் தலையிட்டு கிராம மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு வேறு இடத்தில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளியை அமைக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “மணிமங்கலம் அரசினர் உயர் நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப் பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் அதி காரிகளுக்கு கோரிக்கை வைக் கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. தனியார் அமைப்பு கட்டிடம் கட்ட முன் வந்தது. அதற்கு தேவையான நிலம் வருவாய்த் துறையிடம் கேட் கப்பட்டது. ஆனால் பல ஆண்டு கள் ஆகியும் அவர்கள் நிலம் வழங்கவில்லை. இதனால் 5 சென்ட் நிலத்தில் போதிய இட வசதி இல்லாமல் தற்போது கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு முன்வர வேண்டும்” என்றார்.