தூத்துக்குடி, திருச்சி அருகே இரு வேறு விபத்துகளில் குழந்தை உட்பட 8 பேர் பலி

தூத்துக்குடி, திருச்சி அருகே இரு வேறு விபத்துகளில் குழந்தை உட்பட 8 பேர் பலி
Updated on
1 min read

தூத்துக்குடி மற்றும் திருச்சி அருகே நேற்று நடந்த இரு வேறு விபத்துகளில் 2 வயது குழந்தை உட்பட 8 பேர் பலியாகினர்.

தூத்துக்குடி மாவட்டம் எப்போ தும்வென்றான் அருகே சாலையின் மத்தியில் உள்ள தடுப்பில் மோதி கார் கவிழ்ந்ததில் சிறுவன் உள் ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை யைச் சேர்ந்த 12 பேர் ஒரு காரில் நேற்று முன்தினம் இரவு திருச்செந் தூருக்கு புறப்பட்டு வந்தனர். காரை சீனிவாசன்(44) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார், நேற்று அதிகாலை 5 மணியளவில் தூத் துக்குடி- மதுரை தேசிய நெடுஞ் சாலையில் எப்போதும்வென்றான் அருகே ஜெகவீரபாண்டியபுரத்தில் வந்துகொண்டு இருந்தபோது, சாலையில் இருந்த பள்ளத்தில் வேகமாக இறங்கி ஏறியதில் டயர் பஞ்சரானது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில், காரை ஓட்டி வந்த சீனிவாசன் மற்றும் கணேசன்(62) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 10 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் மகன் வசீஸ்தரன்(15), கணேசன் மனைவி சண்முகவள்ளி (55) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்த கவிதா(38), சுகப்பிரியா(28), சத்யா(32), முருகேசன்(42), திருபாலன்(8), சத்திகா(12), தனு (10), மோகன்ராஜ்(19) ஆகிய 8 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எப்போதும் வென்றான் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

மதுரை எஸ்எஸ் காலனியைச் சேர்ந்தவர் நட்சத்திரராஜா(60). இவரது மனைவி சுகந்தி(55), மகன் வினோத்குமார்(35), மருமகள் தீப பிரியா(30), பேரக்குழந்தை அபி(2). இவர்கள் 5 பேரும் நேற்று மதுரை யில் இருந்து காரில் புதுச்சேரிக்குப் புறப்பட்டனர். காரை, வினோத் குமார் ஓட்டி வந்ததாகக் கூறப்படு கிறது.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலையில் திருச்சியை அடுத்த கொணலை பகுதியில் சென்ற போது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில், நட்சத்திரராஜா, சுகந்தி, வினோத்குமார், குழந்தை அபி ஆகிய 4 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். பலத்த காயங் களுடன் மீட்கப்பட்ட தீபபிரியா, திருச்சி தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in