கடலூர் | சிதம்பரம் கோயில் தீட்சிதர் மீது தாக்குதல்

கடலூர் | சிதம்பரம் கோயில் தீட்சிதர் மீது தாக்குதல்
Updated on
1 min read

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு தீட்சிதர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற நடராஜர் என்கிற தர்ஷன் தீட்சிதரிடம், குறிப்பிட்ட சில தீட்சிதர்கள் மீதான எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கை வாபஸ் பெறக் கோரி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்கு, ‘நான் அந்த வழக்கை தொடரவில்லை; அது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் தொடுத்த வழக்கு' என்று நடராஜர் தீட்சிதர் கூறினாராம்.

இதில் ஏற்பட்ட தகராறில் அவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. நடராஜர் தீட்சிதர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா காலம் முடிந்தும், இக்கோயிலில் உள்ள கனகசபையில் யாரும் ஏறி வழிபடக்கூடாது என தீட்சிதர்கள் தீர்மானம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பட்டியலினப் பெண் ஷீலா என்கிற லட்சுமியை கனசபையில் ஏறி வழிபட உதவி செய்தவர் இந்த நடராஜர் தீட்சிதர் எனக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in