ஆர்.எஸ்.எஸ்., பாஜக-வினரின் தலைகளை துண்டிக்க ஐஎஸ் தொடர்புக் குழுவுக்கு உத்தரவு வந்ததாக தகவல்

ஆர்.எஸ்.எஸ்., பாஜக-வினரின் தலைகளை துண்டிக்க ஐஎஸ் தொடர்புக் குழுவுக்கு உத்தரவு வந்ததாக தகவல்
Updated on
1 min read

கேரளாவில் சமீபத்தில் ஐஎஸ். தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்ட 6 பேர் குழுவிடம் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினரின் தலைகளை துண்டிக்க ஆப்கானைச் சேர்ந்த ஐஎஸ் நபர் உத்தரவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதாவது 2 ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர், பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தலைகளை துண்டித்து, அதனை வீடியோவில் பதிவு செய்யுமாறு ஆப்கன் ஐஎஸ் நபர் உத்தரவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அபு பஷீர் என்கிற ரஷீத் என்பவரை இதற்காக வாள்களை வாங்குமாறும் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அக்டோபர் 2-ம் தேதி கைது செய்யப்பட்ட இந்த 6 பேரும் கண்ணூரில் மலைப்பிரதேசம் ஒன்றில் கூடி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் நவம்பர் மாதம் நடத்தும் பேரணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக ஓமர் அல் ஹிந்தி என்பவர் கத்தாரிலிருந்து சம்பந்தமில்லாமல் கேரளா வந்ததை மோப்பம் பிடித்த தேசிய புலனாய்வுக் கழகம் இந்த 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in