Published : 09 Aug 2022 03:30 PM
Last Updated : 09 Aug 2022 03:30 PM
சென்னை: "கெலோ இந்தியா (Khelo India) திட்டத்தின் மாநில பட்டியலில் உள்ள விளையாட்டுத் துறைக்கு நமது மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கெலோ இந்தியா (Khelo India) திட்டத்தின் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாநில அரசின் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.
ஆனால், இந்த திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல், தெரிந்துகொள்ள எந்தவித முயற்சியையும் எடுக்காமல் பொய்களைப் பரப்பி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்கு தலைகுனிவு.
இது ஒரு demand driven திட்டம். மற்ற மாநிலங்கள் இந்தத் திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தி மத்திய அரசிடம் நிதிப்பெற்று தங்களது மாநில விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளனர்.
மாநிலப் பட்டியலில் உள்ள விளையாட்டுத் துறைக்கு நமது மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ‘கெலோ இந்தியா’ திட்டத்தின் கீழ், மத்திய அரசு விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. இதில் அதிகபட்சமாக குஜராத்திற்கு ரூ.608 கோடியும், உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.503 கோடியும் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இந்நிலையில், தமிழகத்திற்கு ரூ.33 கோடியை ஒதுக்கீடு செய்திருந்தது. இதை முன்வைத்து பலரும் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT