காவிரி மேலாண் வாரியம்: மத்திய அரசின் நடவடிக்கை சட்டத்துக்கு விரோதமானது- பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

காவிரி மேலாண் வாரியம்: மத்திய அரசின் நடவடிக்கை சட்டத்துக்கு விரோதமானது- பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
Updated on
1 min read

காவிரி பிரச்சினையில் கர்நாடகா வுக்கு ஆதரவாகவும், அரசியல மைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும் மத்திய அரசு செயல்படுவதாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியது: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 2013-ல் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் தலைமை யிலான மத்திய அரசில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசி தழாக்கப்பட்டது. அதன்பிறகு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற் றுக்குழு அமைக்கப்பட வேண்டு மென்பது சட்டத்துக்கு உட்பட்ட தாகும்.

கர்நாடகம் ஏற்றுக்கொண்டது

இதை கடந்த 2013-ல் கர்நாடக முதல்வராக இருந்த ஜெகதீஷ் ஷட்டர் ஏற்றுக்கொண்டார். அவரது தலைமையிலான அரசு, உச்ச நீதிமன்றத்திலேயே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் விவசாயிகளின் பாதிப்புகளை உணர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி கள் தாமாகவே முன்வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதனை அப்போது ஏற்றுக் கொண்ட மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், 4-ம் தேதிக்குள் பட்டியல் அளிப்பதாகத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் நெருக்கடி

ஆனால், தற்போது கர்நாட கத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் களின் நெருக்கடிக்குப் பயந்து, மேலாண்மை வாரியத்தை அமைக்க சொல்வதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கூறி யிருப்பது சட்டவிரோதமானது.

இந்த விஷயத்தில், அரசியல மைப்புச் சட்டத்தைப் பாதுகாப் பதற்கும், தமிழக விவசாயிகளை வாழவைப்பதற்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் முன்வரவேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

தமிழக ஆளுநருடன் இன்று சந்திப்பு

பி.ஆர்.பாண்டியன் மேலும் கூறியது: காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டுக்குழுவை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி சம்பா சாகுபடிக்கு உரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். கர்நாடக கலவரத்தின்போது, சேதமடைந்த பேருந்துகள், லாரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உடைமைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (அக்.4) காலை10.30 மணிக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவிடம் விவசாயிகளும், வர்த்தகர்களும் இணைந்து மனு அளிக்கவுள்ளோம்.

இந்த குழுவில், என் தலைமையில் வணிகர் சங்க துணைப் பொதுச் செயலாளர் மோகன், துணைத் தலைவர் வி.பி.மணி, விவசாயிகள் சார்பில் தஞ்சை புண்ணியமூர்த்தி, திருவாரூர் டி.பி.கே.ராஜேந்திரன், நாகை ராமதாஸ் உட்பட 15 பேர் இடம் பெற்றுள்ளனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in