முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: முதல்வர் ஸ்டாலின் கடிதம் 
Updated on
1 min read

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார். அதில், "முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மதகுகளை திறப்பது குறித்து கேரள அரசிடம் 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்குப் பதில் அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், "முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அந்த அணையிலிருந்து விதிகளின்படி தண்ணீர் திறந்து விடப்படுகிறட்து. அணைக்கு அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in