

சென்னை: தெற்கு ரயில்வேயில் அனைத்து விரைவு மற்றும் பாசஞ்சர் ரயில்கள் மீண்டும் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் 310 பாசஞ்சர் ரயில்கள்உட்பட 910 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் 324 மெயில்,விரைவு ரயில்கள் மற்றும் 310 பாசஞ்சர் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன.
கரோனா ்தொற்று காரணமாக, இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதன்பிறகு, இந்த ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டன. தற்போது, தெற்கு ரயில்வேயில் அனைத்து மெயில், விரைவு மற்றும்பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கரோனாவுக்கு முன்பாக, மற்ற மண்டலங்களில் இயக்கப்பட்ட 276 ரயில்களில் 272 ரயில்கள் தற்போது மீண்டும் இயக்கப்படுகின்றன. கரோனா காலத்தில் முன்பதிவில்லாத பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் விரைவு, அதிவிரைவுரயில்களாக மாற்றப்பட்டதால் கட்டணம்உயர்ந்தது என்று தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறினர்.