சென்னை மாநகராட்சி ஆணையர் பெசன்ட் நகர் கடற்கரையில் ஆய்வு

சென்னை மாநகராட்சி ஆணையர் பெசன்ட் நகர் கடற்கரையில் ஆய்வு
Updated on
1 min read

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் கடந்த 5-ம் தேதி முதல் தினமும்ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.15,700 அபராதம்

இதன்படி, மெரினா கடற்கரையில் கடந்த 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 4 நாட்களில் 1391 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 61 கடை உரிமையாளர்களிடமிருந்து 71 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.15,700 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடுப்பு பணிகள்

இதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பிளாஸ்டிக் தடுப்பு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், கடற்கரையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மண்டல அலுவலரிடம் கேட்டறிந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in