Published : 12 Oct 2016 09:16 AM
Last Updated : 12 Oct 2016 09:16 AM

உடல் பருமனை ஏற்படுத்தும் உணவுகளுக்கு ‘கொழுப்பு வரி’: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

உடல் பருமனால் பாதிக்கப்படு வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பருமனை ஏற்படுத்தும் உணவுப் பொருட் களுக்கு ‘கொழுப்பு வரி’ விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

உலக உடல்பருமன் நாள் அக்டோபர் 1-ம் தேதி கடை பிடிக்கப்படுகிறது. இன்றைய உலகின் மிகப்பெரிய பேராபத்து களில் ஒன்றாக உடல்பருமன் மாறியுள்ளது. இதனால், உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் 2011-ல் உலக நாடுகள் ஒன்றுகூடி, உடல்பருமன் பாதிப்பை 2025-ம் ஆண்டுக்குள் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த இலக்கு தமிழகத்துக்கு மிக முக்கியமானதாகும். ஏனென் றால், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் உடல்பருமனால் பாதிக்கப்பட்டோர் அளவு 10 சத வீதம் அதிகரித்துள்ளது. 2005-06ல் தமிழக ஆண்களில் 14.5 சதவீதம் பேர், பெண்களில் 20.9 சதவீதம் பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2015-16ல் ஆண்களில் 28.2 சதவீதம் பேர், பெண்களில் 30.9 சதவீதம் பேர் என இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக் கிறது.

நீரிழிவு, இதய நோய்கள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல தொற்றா நோய்களை உடல்பருமன் உருவாக்குகிறது. உடல்பருமன் மற்றும் அதுதொடர்பான தாக்குதலால்தான் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சென்னை நகரில் மட்டும் நான்கில் ஒரு குழந்தை உடல்பருமனால் பாதிப்படைந்துள்ளது. தவறான உணவுப் பழக்கம், அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக உப்பு நிறைந்துள்ள உணவுகள், மென்பானம், அளவுக்கு அதிக மாக தொலைக்காட்சி பார்த்தல், உடற்பயிற்சி இல்லாதது, பள்ளி களில் விளையாட்டு குறைந்து போனது ஆகியவையே உடல்பருமனுக்கு காரணம்.

எனவே, உடல்பருமனை தடுப்பது, குறிப்பாக குழந்தை களையும் இளம்பருவத்தி னரையும் உடல்பருமன் பேராபத் தில் இருந்து காப்பது அவசரத் தேவை. அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக உப்பு கொண்ட மென்பானங்கள், பீட்சா, பர்கர் வகைகள், கொழுப்பு மிகுதியான பொட்டல உணவு முறைகளை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். பருமனை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள் மீது ‘கொழுப்பு வரி’ விதிக்க வேண்டும். பள்ளி களிலும், பள்ளிகளுக்கு அருகி லும் நொறுக்குத் தீனி, மென் பானம், பெருந்தீனி வகைகளை அரசு தடை செய்ய வேண்டும். பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகளை கட்டாயமாகவும், போதுமான நேரமும் நடத்த வகை செய்ய வேண்டும். தெருக்கள், சாலைகளில் நடக்கவும், மிதி வண்டியில் செல்லவும், வாய்ப் புள்ள இடங்களில் மக்கள் ஒன்று கூடவும், விளையாடவும் போதிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இதை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x